நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாச்சிப்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்.11) தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்றனர்.
அறிவிப்பு பலகையில் பதற்றமான சூழ்நிலை இருப்பதாக கூறி தேர்தலை ஒத்தி வைப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து பாமகவினர் தேர்தல் அலுவலர்களிடம் விளக்கம் கேட்க சென்றபோது தேர்தல் அலுவலரும் இல்லை கூட்டுறவு சங்க அலுவலர்களும் இல்லை மேலும் அவர்களிடம் அங்கிருந்தவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நாச்சிப்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: காட்டு யானையை பிடிப்பதில் தொய்வு: மருத்துவர்கள், வனத்துறையினரிடையே கருத்து வேறுபாடு