ETV Bharat / state

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்கும் கிராம மக்கள்! - Opposition to setting up the roaming tower

தனியார் நிலத்தில் அலைபேசி உயர் கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்து, சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

நாமக்கல் அருகே தனியார் நிலத்தில் அலைபேசி உயர் கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்து, சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ஊர் மக்கள் சார்பாக ஆங்காங்கே பிளக்ஸ், பேனர் வைக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Mar 9, 2021, 12:27 PM IST

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் அருகே தனியார் நிலத்தில் அலைபேசி உயர் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. அலைபேசி உயர் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறி அலைபேசி உயர் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே, அலைபேசி உயர் கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட 4, 5ஆவது வார்டு பொதுமக்கள் வருவாய் துறையினரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் அருகே தனியார் நிலத்தில் அலைபேசி உயர் கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்து, சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ஊர் மக்கள் சார்பாக ஆங்காங்கே பிளக்ஸ், பேனர் வைக்கப்பட்டுள்ளது.

மனுவினைப் பெற்றுக் கொண்ட அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி, தேர்தலைப் புறக்கணிப்போம் என ஆங்காங்கே பிளக்ஸ், பேனர்கள் வைத்துள்ளனர். அலைபேசி உயர் கோபுரம் அமைப்பதை தடுத்தால் மட்டுமே சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்போம் என அப்பகுதி மக்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பேரவைத் தேர்தல் 2021: தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியன் யூனியம் முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.