நாமக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கும் கால் டாக்ஸிகளை முறைப்படுத்தி தங்களது வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வாடகை கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " கடந்த சில நாள்களாக ஈரோட்டில் செயல்படும் தனியார் கால் டாக்ஸி நிறுவனம் எவ்வித அனுமதியும் பெறாமல் ஈரோட்டிலிருந்து திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளுக்கு மிக குறைந்த வாடகையில் கார்களை இயக்கி வருகின்றது. இதனால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, புதியதாக தொடங்கப்பட்டுள்ள கால் டாக்ஸி நிறுவனங்களை முறைப்படுத்தி தங்களது தொழிலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - மருந்து தயாரித்த மாணவர் ஆட்சியரிடம் மனு