கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி, நாமக்கல்லில் உள்ள மூலிகை சுற்றுலாத் தலமான கொல்லிமலையிலும் அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன.
இந்நிலையில், கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுவதை அறிந்த வெளியூரை சேர்ந்த மக்கள், அதிகளவில் கொல்லிமலைக்கு வருகை தருகின்றனர். ஊரடங்கு உத்தரவையும் மீறி மாசிலா அருவியில் குளித்து கும்மாளம் போடும் மக்கள், அப்பகுதியில் மது அருந்திவிட்டு பாறைகள் மீது ஆபத்தான ஸ்டன்ட்ஸ் செய்தும் வருகின்றனர்.
அதிகப்படியான மக்கள் ரகசியமாக வந்து செல்வது கொல்லிமலை பகுதியில் அதிகளவில் கரோனா பரவல் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.