நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த பொன்னேரி கோம்பை பகுதியில் அரசுக்குச் சொந்தமான 18 ஏக்கர் பரப்பளவிலான நீர்த்தேக்க குட்டை உள்ளது. இந்தக் குட்டைப் பகுதியை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, குட்டைப் பகுதி வழியாகப் பொதுமக்கள் பயன்படுத்திவந்த பொது வழித்தடத்தையும் அவர்கள் அடைத்துவிட்டனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவதிப்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆக்கிரமைப்பை அகற்றக்கோரி மனு
இது குறித்து, வருவாய்த் துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மேகராஜை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்