நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கிவருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் அச்சு மற்றும் உருண்டை வெல்லம் பிலிக்கல்பாளையத்தில் உள்ள 13 வெல்ல மண்டிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஏலம் விடப்பட்டு வந்தது.
அதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு, வெல்லத்தை ஏலம் எடுத்து லாரிகள் மூலம் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிமாவட்ட வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்லும் பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலச் சந்தையை மறுஉத்தரவு வரும்வரை மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உத்தரவை மீறி ஏலம் நடத்தினால் அரசு விதிமுறைகளின்படி தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:புவிசார் குறியீடு பெற்ற மறையூர் வெல்லம்