நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேவுள்ள பல்லாக்காபாளையத்தில் தனியார் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப இணைந்து மாநில அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம், மாணவர்களின் நவீன கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாட்டில் முதலமைச்சரின் உத்தரவின்படி சுற்றுலாத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் நிலையில் கொல்லிமலையில் விரைவில் பாராசூட், சாகச சுற்றுலா உள்ளிட்ட திட்டம் விரைவில் கொண்டு வரயிருப்பதாக கூறினார்.
குற்றலாத்தை மேம்படுத்த சுற்றுலாத் துறையின் கீழ் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஒக்கேனக்கலுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கன்னியாகுமரி கடற்கரை, ஏலக்கிரி மலையில் சாகச சுற்றுலாத் துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சென்னை பூண்டிகுளவாய் ஏரி, திருப்பூர் ஆண்டிபாளையம், குண்டாறு காமராஜர் சாகர் அணைகளில் படகு சவாரி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த கண்காட்சியில் தமிழகத்தில் இருந்து 400மாணவர்கள் தங்களது அறிவியல் தொழில்நுட்ப படைப்புகளை பார்வைக்காக வைத்தனர்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முற்றுகை: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு