சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத் துறை சார்பில், சேலம் மண்டலத்தில் நடப்பாண்டின் கண்காட்சி நாமக்கல்லில் இன்று (ஜன. 09) நடைபெற்றது.
இதனை, மாவட்ட ஆட்சியர் மெகராஜ், கலை பண்பாட்டுத் துறையின் ஆணையர் கலையரசி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெகராஜ், "தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றும்விதமாக கிராமியக் கலைகள் உள்ளன. இதனை அனைவரும் பாதுகாத்திட வேண்டும். இன்றும், நாளையும் நடைபெறும் இந்தத் கலை பண்பாட்டுத் துறையின் கலை நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கண்காட்சியில் ஓவியச் சிற்பக்கலைஞர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் நாட்டுப்புற கலைஞர்களின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது.