ETV Bharat / state

ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: தலைமறைவாக உள்ள மகனுக்கு வலைவீச்சு - நாமக்கல் சேந்தமங்கலம்

நாமக்கல்:  சேந்தமங்கலம் அருகே மூதாட்டி வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார். சொத்துக்காக கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் தப்பியோடிய மூதாட்டியின் மகனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Old lady murder in Namakkal district
Old lady murder in Namakkal district
author img

By

Published : Aug 24, 2020, 12:18 PM IST

Updated : Aug 24, 2020, 2:46 PM IST

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள சின்னபள்ளம்பாறை ஆலமரத்து தோட்டத்தில் உள்ள வீட்டில் பவளவாய் (75) என்ற மூதாட்டி தனது மகன் வேலுச்சாமியுடன் வசித்துவந்தார். இவர் நேற்று (ஆகஸ்ட் 23) இரவு முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மூதாட்டியின் மகள் வந்து பார்த்தபோது பவளவாய் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து சேந்தமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேந்தமங்கலம் காவல் துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு‌ உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வேலுச்சாமியின் மனைவி பிரிந்துசென்ற நிலையில் தாயும், மகனும் தோட்டத்தில் வசித்துவந்தனர். பவளவாய் தனது சொத்துகளைப் பேரன்களுக்கு எழுதிவைத்த நிலையில் பவளவாயிக்கும் வேலுச்சாமிக்கும் தகராறு இருந்துவந்துள்ளது.

இதனால் வேலுச்சாமியே தனது தாயை கொலைசெய்தாரா? என்ற கோணத்தில் தலைமறைவாக உள்ள அவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Last Updated : Aug 24, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.