டாடா குழுமங்களின் தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர் நடராஜன் சந்திரசேகரன். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்தவரான நடராஜன் சந்திரசேகரன், இன்று நாமக்கல்லில் உள்ள தனியார் புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”தனது பள்ளி பருவத்தில் சினிமாவிற்கு கூடச் சென்றதில்லை. 25 வயது வரை வெளிப் பயணங்களே மேற்கொண்டதில்லை. ஆனால் அதற்கடுத்த 25 ஆண்டுகள் பயணங்கள் இல்லாத நாட்களே இல்லை. மோகனூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உயர்ந்த பதவிக்கு வந்தாலும், சொந்த ஊரையும், மக்களையும் நினைக்காத நாளில்லை.
நாமக்கல் பகுதி மக்கள் கடின உழைப்பாளிகள், சிறந்த தொழில் முனைவோர்கள். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் தொடர் முயற்சி செய்தால், வாழ்வில் பெரும் வெற்றிகளைப் பெற முடியும் என்பதற்கு, நானே சிறந்த எடுத்துக்காட்டு” என்று பேசினார்.
இதையும் படிங்க: மாட்டு வண்டியில் வலம் வந்த மணமக்கள்!