நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி இயங்கி வருகிறது. அங்குக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இமேஜ் மைண்ட் நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி மாணவ மாணவிகள் 1000க்கும் மேற்பட்டோர் கின்னஸ் சாதனைக்காகக் கடந்த நான்கு நாட்களாக 13 ஆயிரம் ஸ்டிக்கி நோட் சீட்டில் மாணவர்களின் கருத்துகளை எழுதி, 30 அடி உயரத்திலும் 24 அடி அகலத்திலும் நேரு உருவப்படத்தை பிக்ஸல் ஆர்ட் ஆக ஒட்டி சாதனை செய்தனர்.
மேலும், நேரு பிறந்தநாளையொட்டி குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு மைக்செட் என்ற பெயரில் பிரத்யேக வானொலி தொடங்கப்பட்டது. இந்த வானொலி, மாணவர்களுக்கான கல்வியில் உள்ள சந்தேகங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், பிறந்த நாள் வாழ்த்துகள் போன்ற தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: குழந்தைகள் தினத்தில் பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!