ETV Bharat / state

நீட் தேர்வு: நாமக்கல் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்; தேசிய அளவிலும் சாதனை - நீட் தேர்வு முடிவுகள்

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இருவர், நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த மாணவி கீதாஞ்சலி அகில இந்திய அளவில் 23ஆவது இடத்தையும், மாணவன் பிரவீன் 30ஆவது இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு முடிவுகள், neet exam results, நாமக்கல் மாணவர்கள் முதலிடம், nammakal students state first
நீட் தேர்வு முடிவுகள், neet exam results
author img

By

Published : Nov 2, 2021, 8:28 AM IST

Updated : Nov 2, 2021, 9:02 AM IST

நாமக்கல்: இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2021-22ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று நடத்தப்பட்டது.

225 நகரங்களில் 16 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வினை எழுதியிருந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவ மாணவிகள் இத்தேர்வை எதிர்கொண்டனர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நேற்று (நவ. 1) வெளியானது. மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது.

மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பள்ளி நிர்வாகம், பெற்றோர்

ஒரே பள்ளி மாணவர்கள் சாதனை

இதில், நாமக்கல் புதுப்பட்டியில் உள்ள தனியார்ப் பள்ளியில் பயின்ற எஸ்.ஏ கீதாஞ்சலி என்ற மாணவியும், என்.பிரவீன் என்ற மாணவனும் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அதாவது ஒரே பள்ளியில் இரண்டு பேர் மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், அகில இந்திய அளவில் மாணவி கீதாஞ்சலி 23ஆவது இடத்தையும், மாணவன் பிரவீன் 30ஆவது இடத்தையும் பிடித்தனர்.

மாணவி எஸ்.ஏ கீதாஞ்சலி, மாணவன் என்.பிரவீன், நீட் தேர்வு முடிவுகள், neet exam results, நாமக்கல் மாணவர்கள் முதலிடம், nammakal students state first
மாணவி எஸ்.ஏ கீதாஞ்சலி, மாணவன் என்.பிரவீன்

இதே தனியார்ப் பள்ளியில் பயின்ற டி.அர்ச்சிதா என்ற மாணவி 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், அகில இந்திய அளவில் 60ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

Last Updated : Nov 2, 2021, 9:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.