ETV Bharat / state

நாட்டு காளைகளை அப்புறப்படுத்தக் கூடாது: காளைகளுடன் களமிறங்கிய விவசாயிகள் - காளை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: நாட்டு காளைகளை கல்லூரியிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் காளை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
author img

By

Published : Jun 1, 2020, 7:06 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நாட்டு காளைகளுடன் சேர்த்து முர்ரா, ஜெர்சி, கிர் உள்ளிட்ட உயர் ரக காளைகள் வளர்க்கப்பட்டுவருகின்றன.

இந்த மாடுகளின் மூலம் உறைவிந்து சேகரிக்கப்பட்டுகிறது. அதில் எடுக்கப்படும் சினை ஊசிகள் 15 ரூபாய் விலையில் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் நாட்டு மாடு ரக சினை ஊசி விற்பனையை கல்லூரி நிர்வாகம் நிறுத்திவிட்டு இங்குள்ள காளைகளை சென்னை தேசிய பால்வள ஆராய்ச்சி மையத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாட்டு மாடு சினை ஊசிகள் இனவிருத்திக்காக வழங்கப்படுவது பாதிக்கப்பட்டு, இனவிருத்தியும் தடைப்படும் சூழ்நிலை உள்ளது.

இதனால், நாட்டு மாடு சினை ஊசிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும், காளைகளை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து அப்புறப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம், நாமக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவை ஆகிய அமைப்புகள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்பு நாட்டு மாட்டு காளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.