நாமக்கல்: நேற்று (ஜூன் 17) நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஸ்ரேயா பி சிங், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில், பாதுகாப்பு கவச உடையணிந்து ஆய்வுசெய்தார்.
அப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவரும் அனைத்து நோயாளிகளிடம் கலந்துரையாடினார். அப்போது மருத்துவர்கள் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சைகளைச் சரியான நேரத்தில் அளிக்கின்றார்களா, செவிலியர் 24 மணி நேரமும் கண்காணித்துக் கொள்கிறார்களா, மூன்று நேரமும் தரமான உணவுகள் வழங்கப்படுகின்றனவா என நோயாளிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவமும், அனைத்து அடிப்படை உதவிகளும் தகுந்த முறையில் அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கரோனா சிகிச்சைப் பிரிவினை ஸ்ரேயா சிங் ஆய்வுமேற்கொண்ட சம்பவம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சிவசங்கர் மாணவிகளுக்கு தாத்தா மாதிரி - பாபாவை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்கள்!