நாமக்கல் ராசிபுரம் அருகே பழந்தின்னிப்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாமக்கல் எம்.பி., சின்ராஜ் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'பதவிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. என்றைக்கு இந்தப் பதவிக்கு வந்தேனோ அன்றில் இருந்து மனநிம்மதி இல்லை; இதை விட மோசமான நிலை என் வாழ்க்கையில் வந்ததில்லை' என விரக்தியாக கூறினார்.
'இனி, இந்த வேலைக்கே நான் வர மாட்டேன் என்ற நிலைக்கு வந்து விட்டேன்; நல்லவர்கள் அரசியலில் இருப்பது மிகவும் கடினம்' என வருத்தமாகப் பேசினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
சின்ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
இதையும் படிங்க: அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!