நாமக்கல் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அண்மைக்காலமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நகர் பகுதிகளில் நோய்த்தொற்று இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு மினி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கரோனா பரிசோதனையையும் மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கில் உதவி கிடைக்காமல் திணறும் காப்பகங்கள்