கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ், உலக வங்கி உதவியுடன், நிதியுதவி வழங்கப்பட்டது.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7,099 குடும்பங்களுக்கு 7 கோடியே 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், "கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த இதுபோன்ற கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடன் பெற்றவர்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளனர்,
தங்கம் வைத்து கடன் பெற்றவர்கள், அதனை முழுமையாகப் பயன்படுத்தி தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்வதோடு, கடனையும் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்" என்றார்.