ETV Bharat / state

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த ஓட்டல் தொழிலாளி கைது! - child pronograpy latest arrest

நாமக்கல்: சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஓட்டல் தொழிலாளியை சைபர் கிரைம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

child pronograpy latest arrest
நாமக்கல் சிறார் ஆபாச படங்கள் கைது
author img

By

Published : Feb 12, 2020, 8:20 AM IST

Updated : Feb 13, 2020, 3:12 PM IST

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள சோழசிராமணி, மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி (35). இவர் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்துவருகிறார்.

குருசாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊரான மாராப்பாளையத்திற்கு வந்திருந்தார்‌. இவர் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வதற்காகவே தனக்கென்று ஒரு புதிய பேஸ்புக் கணக்கை தொடங்கி இயக்கிவந்தார். அவர் பேஸ்புக் பக்கத்தை பார்த்த சென்னை காவல் துறையினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். பேஸ்புக்குடன் அவர் வாட்ஸ்அப் குழுக்களிலும் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து நாமக்கல் சைபர் கிரைம் காவல் துறையினரை தொடர்புகொண்ட சென்னை காவல் துறையினர், அவர் பற்றிய தகவலைப் பகிர்ந்தனர். அதனடிப்படையில் சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த குருசாமியை நாமக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும் அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகம்

இதையும் படிங்க: குழந்தைகள் ஆபாச வீடியோ கைது லிஸ்டில் வடமாநில இளைஞர்!

Last Updated : Feb 13, 2020, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.