நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றியங்களில் உள்ள கிளை நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இத்தேர்தலை கண்காணிக்க திமுக தலைமை சார்பில் தேர்தல் மேற்பார்வையாளராக குத்தாலம் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி பெரும்பாலும் போட்டியின்றி ஒருமனதாக அந்தந்த ஒன்றிய செயலாளர்களே தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், எருமபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக கட்சியில் உள்ளவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கவில்லை எனக்கூறி, நாமக்கல் முல்லை நகரில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட திமுகவினர் திடீரென முற்றுகையிட்டனர்.
அப்போது, ஒன்றிய செயலாளர் பாலு (எ) பால சுப்ரமணியன் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். மேலும், குத்தாலம் அன்பழகனிடம் ஒன்றிய செயலாளர் பாலு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். திமுக அலுவலகத்தை திமுகவினரே முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ஸ்டாலின் பசும்பொன்னில் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்'