ETV Bharat / state

திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுவதே முதல் பணி

நாமக்கல்: நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுவதுதான் முதல் திட்டம் என நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் உறுதியளித்துள்ளார்.

திமுக கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ்
author img

By

Published : Apr 5, 2019, 11:03 PM IST

Updated : Apr 5, 2019, 11:36 PM IST

நாமக்கல் மாவட்ட மக்களவைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேட்பாளர் சின்ராசுக்கு ஆதரவு தெரிவித்து செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஒருமித்த கருத்துடன் திமுக வேட்பாளர் சின்ராஜை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பேசிய சின்ராஜ், "நாடாளுமன்றத்தில் தேர்தலில் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். அனைத்து கிராமங்களில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபடும் போது பலதரப்பட்ட மக்களும் மோடி மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என்று தெரிவித்தனர் . நாம் வெற்றிபெற்றுவிடுவோம் என கருத்துக்கணிப்புகள் கூறுகிறது இருப்பினும் அதனை நம்பி பணி செய்யாமல் இருக்க கூடாது. அதே உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் " என்றார்

தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பற்றி எதிர்கட்சியினர் அவதூறு பரப்பிவருகின்றனர். அதனை மக்கள் ஒருபோதும் நம்புவது இல்லை. எனக்கு பக்கபலமாக அனைத்து மக்களும் உள்ளனர் " என கூறினார். இந்தியாவில் கோழிப்பண்ணை நடத்தி வரும் உரிமையாளர்களில் தான் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாகவும் வெற்றி பெற்றால் கோழிப்பண்ணையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் நிரந்தரமாக தீர்வு காணப்படும் " என தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணிமுத்தாறு திட்டத்தை உடனே கையில் எடுப்பது தனது முதல் பணியாகும். இதன் மூலம் விவசாய பிரச்னைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடுக்கும் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

Intro:திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றுவதே எனது முதல் திட்டம் - திமுக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ்

Body:நாமக்கல் மாவட்ட மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார்.

இன்று தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேட்பாளர் சின்ராசுக்கு ஆதரவு தெரிவித்து செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஒருமித்த கருத்துடன் திமுக வேட்பாளர் சின்ராஜை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளர் சின்ராஜ் வருகின்ற தேர்தலில் நிச்சியமாக தான் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். தான் அனைத்து கிராமங்களில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபடும் போது பலதரப்பட்ட மக்களும் மோடி மீண்டும் ஆட்சியமைக்க கூடாது என விரும்புவதாக தெரிவித்தார். நாம் வெற்றிபெற்றுவிடுவோம் என கருத்துக்கணிப்புகள் கூறுகிறது இருப்பினும் அதனை நம்பி பணி செய்யாமல் இருக்க கூடாது. அதே உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.

மேலும் தன்னைப் பற்றி எதிர்கட்சியினர் அவதூறு பரப்பிவருவதாகவும் அதனை மக்கள் ஒருபோதும் நம்புவது இல்லை. எனக்கு பக்கபலமாக அனைத்து மக்களும் உள்ளனர் என பெருமிதம் கொண்டார். தான் ஒருமுறை கோழிப்பண்ணையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அமைச்சர்களை சந்தித்து ஆறுமுறை மனு அளித்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் தன்னையும் நிர்வாகிகளையும் அவமானப்படுத்திவிட்டதாகவும் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்கவே இல்லை என தெரிவித்தார்.இந்தியாவில் கோழிப்பண்ணை நடத்தி வரும் உரிமையாளர்களில் தான் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாகவும் வெற்றி பெற்றால் கோழிப்பண்ணையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரமாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார். மேலும் ஆட்சியில் அமர்ந்தால் திருமணிமுத்தாறு திட்டத்தை உடனே கையிலெடுப்பது தனது முதல் பணியாகும் இதன் மூலம் விவசாயப்பிரச்சினைகளும் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

Conclusion:இதில் நாமக்கல்லில் உள்ள நூற்றிற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Apr 5, 2019, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.