நாமக்கல் மாவட்டத்தில் அண்மை காலமாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நகர் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நகைக்கடைகளின் வியாபாரிகள், ஊழியர்களுக்கு அதிகளவில் கரோனா தொற்று பரவி வருவதால் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், ராசிபுரம் நகரில் உள்ள நகை கடைகளுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும் திருச்செங்கோட்டில் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை மதியம் 3 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட நகை கடைகள் மூடப்படும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்று பரவல்: நகை கடைகள் மூடல்
நாமக்கல்: கரோனா தொற்று பரவல் காரணமாக 500க்கும் மேற்பட்ட நகை கடைகள் மூடப்பட்டுள்ளன.