நாமக்கல் - சேலம் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கரோனா ஊரடங்கால் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
முருகன் கோவில் பேருந்து நிறுத்தம்,பொன்விழா நகர் மற்றும் முதலைப்பட்டி பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி ஆமை வேகத்தில் நடைப்பெற்று வருகிறது.
இதனால் கடந்த சில தினங்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. சாலையில் பயணிப்போரின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை பலகை, தடுப்புகள் போன்றவை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.