நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நாகர்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (53) என்பவரை அவரது உறவினர்களான குமரேசன் (27), சுப்பிரமணி (52) மற்றும் துரைசாமி (25) ஆகியோர் கட்டையால் அடித்து கொலை செய்தனர்.
இந்த வழக்கில் நடராஜனின் உறவினர்களான குமரேசன், சுப்பிரமணி மற்றும் துரைசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று(பிப்ரவரி 24) வழங்கப்பட்டது.
இதில் குமரேசன், சுப்பிரமணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், துரைசாமி என்பவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க:மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது - டிராக்டர் பறிமுதல்!