பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதன் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், விவசாயிகள் வழங்கிய ஆவணங்களின் நகல்களை வருவாய்த் துறையினர் உதவியுடன் அலுவலர்கள் சரிபார்த்தனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கிசான் வேளாண்மை நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை 117 பேர் போலியான ஆவணங்களை கொடுத்து 82 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கூறுகையில், "பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, இதுவரை ஆயிரத்து 749 பேரிடமிருந்து 68 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள 368 பேரிடமிருந்து 14 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் 71 ரவுடிகள் கைது - மாவட்ட காவல்துறை அதிரடி