பெண் ஊழியருக்குக் கரோனா - நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் மூடல்! - Namakkal district news
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, முதல் மூன்று தளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தின் முதல் மூன்று தளத்திற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் மெகராஜிடம் கேட்ட போது "பெண் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அலுவலகங்கள் மற்றும் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முதல் மூன்று தளங்களில் செயல்படும் அனைத்து அலுவலகங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.