நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன. அதில் தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதி, 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இது குறித்து நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசியா மரியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் எண்ணப்படவுள்ளன. காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுவித்தா தளத்தில் பதிவு செய்யப்படும்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இதுவரை 3275 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் என்ற அடிப்படையில் இதுவரை 1463 முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. சங்ககிரி 23, சேந்தமங்கலம் 21, ராசிபுரம் 21, நாமக்கல் 21, பரமத்திவேலூர் 19 மற்றும் திருச்செங்கோடு 19 ஆகிய சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு தொகுதிக்கு 49 காவலர்கள் என 315 காவலர்கள் பாதுகாப்பு பனியில் ஈடுபடவுள்ளனர்" எனத் தெரிவித்தார்.