ETV Bharat / state

நாமக்கல்லில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல்லில் தலைக்கவசம் அணிந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

DOCTORS_PROTEST
author img

By

Published : Jun 17, 2019, 10:44 AM IST

மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை ஒரு நோயாளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கூறி, நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்கியுள்ளனர்.

இதனைக் கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் ஆறு நாட்களாக போராட்டம் நடத்தினர். மேலும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்லில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், தொடர்ச்சியாக மருத்துவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கத்தினர் தலைக்கவசம் அணிந்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,
  • மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்,
  • மருத்துவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்க நாமக்கல் மாவட்ட கிளை தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Intro:கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரை தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல்லில் ஹெல்மெட் அணிந்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்Body:
கடந்த திங்கட்கிழமை மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கூறி, நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களைத் தாக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாமக்கல்லில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தொடர்ச்சியாக மருத்துவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாமக்கல் தலைமைஅரசு மருத்துவமனை முன்பு தலைகவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும். மருத்துவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்க நாமக்கல் மாவட்ட கிளை தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.