ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின், 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு சிறப்புரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவர், ‘புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி நிலையில் அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு தர வேண்டும். பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது. யார் குற்றவாளி என்பதைப் புலனாய்வுத் துறை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். தற்போதைய தேர்தல் ஆணையத்தின் ஒரு தவறான முடிவும் கொள்கையும் குற்றமானது என நாங்கள் வலியுறுத்தினோம். வட்டாட்சியர் வாக்கு பெட்டி இருக்கும் அறைக்குள் இருந்தது கண்டிக்கத்தக்கது. ஆகையினால் மாநிலத் தேர்தல் அலுவலர்கள் உட்பட அனைவரும் அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இதுபோன்ற தவறுகள் இருக்கின்ற காரணத்தினால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அரசுக்குத் தேர்தல் ஆணையம் துணையாக இருக்கிறது. அதனடிப்படையில் இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்றத்தை நாடினோம். தற்போது நீதிபதி வழங்கியிருக்கும் தீர்ப்பை தாங்கள் வரவேற்பதாகவும் தெரிவித்தார். தற்போது உள்ள மதுரை ஆட்சியர் நடுநிலைமையுடன் செயல்படவேண்டும்’ எனக் கூறினார்