ETV Bharat / state

'தமிழ் புலிகளை அடக்கும்  முயற்சியே காவல் துறையின் கைது நடவடிக்கை' - Metupalayam Wall Issue

நாமக்கல்: தமிழ் புலிகளை அடக்கும் முயற்சியில் கைது நடவடிக்கையை காவல் துறை மேற்கொண்டுவருகிறது என தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Nagai Thiruvalluvan Produced in Namakkal Court
Nagai Thiruvalluvan Produced in Namakkal Court
author img

By

Published : Dec 10, 2019, 7:33 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் பேருந்து கண்ணாடி உடைத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நாகை திருவள்ளுவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது...

அவர் ஆஜராகுவதை அறிந்த தமிழ் புலிகள் அமைப்பினர் பலர் நாமக்கல் நீதிமன்றத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நாகை திருவள்ளுவனின் வழக்கறிஞர் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின்போது நாகை திருவள்ளுவன் சிறையில் இருந்ததாகவும், வேறு யாரேனும் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டால் திருவள்ளுவன் பொறுப்பேற்க முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார். வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஜெயந்தி இந்த வழக்கைப் பதியாமல் சாட்சிகளை மேற்கோள்காட்டி மற்ற வழக்குகளுக்கு ஆஜர்படுத்தக் கூறினார்.

நாகை திருவள்ளுவன்
நாகை திருவள்ளுவன்

இதனையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் புலிகளை அடக்கும் முயற்சியில் காவல் துறை கைது நடவடிக்கையை எடுத்துவருகிறது. அதற்கு அஞ்சமாட்டோம் எனத் தெரிவித்தார்.

நாகை திருவள்ளுவன் பேட்டி

பின்னர் நாமகிரிப்பேட்டையில் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததற்கு பரமத்திவேலூர் நீதிமன்றத்தில் திருவள்ளுவனை ஆஜர்படுத்த பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் சுவர் விபத்து: நாகை திருவள்ளுவன் மீதான வழக்கு தள்ளுபடி!

Intro:தமிழ்புலிகளை அடக்கும் முயற்சியில் கைது நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது - தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன்Body:கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி நாமகிரிபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தமிழ் புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன் இன்று நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.
அவர் ஆஜராகுவதை அறிந்த தமிழ் புலிகள் அமைப்பினர் பலர் நாமக்கல் நீதிமன்றத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளுவனின் வழக்கறிஞர் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின் போது நாகை திருவள்ளுவன் சிறையில் இருந்ததாகவும், வேறு யாரேனும் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டால் திருவள்ளுவன் பொறுப்பேற்கமுடியாது எனவும் வாதத்தை எடுத்துரைத்தார். வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஜெயந்தி இந்த வழக்கை பதியாமல் சாட்சிகளை மேற்கோள்காட்டி மற்ற வழக்குகளுக்கு ஆஜர்படுத்த கூறினார்.

இதனையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழ்புலிகளை அடக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு கைது நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதற்கு அஞ்சமாட்டோம் எனவும் தெரிவித்தார். பின்னர் நாமகிரிப்பேட்டையில் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததற்கு பரமத்திவேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.