நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:
- எங்கும் எதிலும் சாதி உள்ளது. சாதியை வேரோடு அறுக்க வேண்டும். தற்சார்பு விதை முறையைக் கைவிட்டு தற்போது செயற்கை விதைகளைப் பயிரிட்டு வருகிறோம். இதுதான் நோய்களுக்கான முதல் காரணம்.
- படித்தவர்களுக்கு வேலை என அரசு வழங்கி வருகிறது. அதனுடன் படிக்காதவர்களுக்கும் வேலை வழங்கி அவர்கள் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடுவோம். தரமான மருத்துவ வசதியை இலவசமாக ஏற்படுத்துவோம். விவசாயத்தை தேசிய தொழிலாக மாற்றி அரசாணை வெளியிடுவோம்.
- சுழற்சி முறையில் பிரதமரை உருவாக்குவோம் எனக் கூறிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. மீனவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு செய்து தரப்படும். அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.
- தற்சார்பு கொண்ட நாடாக இந்தியாவை மாற்றுவோம். கால்நடைகளை மேய்ப்பது கூட அரசு வேலை என அறிவிப்போம். இதனை மூலம் இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க வழிவகை செய்வோம்.
- உலகத்தை ஆண்ட தமிழினம் இன்று கையளவு உள்ள தமிழ்நாட்டை ஆள முடியாதா எனக் கேள்வி எழுப்பினார். நமது உரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி. இங்கு உள்ளவர்கள் நிர்வாகிகள் அல்ல; அனைவரும் ரத்த உறவுகள். அனைத்து கட்சிகளிலும் தமிழன் இருந்தும், அவர்களின் உரிமையை மீட்க ஒருவர் கூட வரவில்லை.சாதி, மதம் எப்போதும் உணர்ச்சியைப் பிரிக்கும். ஆனால் தமிழன் என்பதுதான் எப்போதும் நம்மை இணைக்கும்.
- கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வழிவகுக்கப்படும். பெற்றோர் குழந்தைகளுக்கு தனித்திறன் கல்வியை மேம்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். அவர்கள் விருப்பப்பட்ட துறையில் சாதிக்க இதுவே அடித்தளமாகும்.