ETV Bharat / state

வெற்றிகரமாக வலம்வரும் சந்திரயான்-2! - கெத்துக்காட்டிய தமிழ்நாடு!

author img

By

Published : Sep 6, 2019, 2:23 PM IST

சேலம்: கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் - 2இன் சோதனை ஓட்டத்திற்காக, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி, குன்ன மலைக்கிராமத்திலிருந்து எடுக்கப்பட்ட 'லூனார் சாயில்' பயன்படுத்தப்பட்டுள்ளது.

chandrayan

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய பயணத்தின் முக்கிய நிகழ்வாக சந்திரயான் - 2 விண்கலம் கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும்.

அதன் முன்னோட்டத்திற்காக நிலவில் உள்ள தரைப் பரப்பைப் போன்ற இடத்தை தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி, குன்ன மலைக் கிராம மலைப்பகுதிகளில் 'லூனார் சாயில்' இருப்பதாகக் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாறைகளை வெட்டி பெங்களூருவுக்கு அனுப்பி ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் தகவல் மைய இயக்குநர் பேராசிரியர் அன்பழகன் இடம் பெற்றிருந்தார். இந்த ஆய்வு குறித்து நமது ஈடிவி பாரத் செய்திக்காக பேராசிரியர் அன்பழகன் பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சந்திராயன்-2 லேண்டர், ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறன் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்தது. ஏற்கனவே நாங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் வகையில் தன்மையை ஆய்வு செய்துவருகிறோம் என்பதை இந்திய அறிவியல் அறிஞர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

அவர்கள் எங்களை நாடியதும் எங்களிடம் உள்ள ஆய்வு முடிவுகளின்படி நாமக்கல் மாவட்டம் சித்தம் பூண்டி, குன்னமலைப் மலைப்பகுதிகளில் நிலவின் தரை பரப்பில் உள்ள 'அனார்த்த சைட்' பாறை வகைகள் இருப்பதைத் தெரிவித்தோம். அந்தப் பாறை வகையை இஸ்ரோ அறிவியல் அறிஞர் வேணுகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அந்தப் பாறை வகையைப் பயன்படுத்தி 50 டன் அளவிற்கு மாதிரிகள் சேகரித்து பெங்களூருவிற்கு அனுப்பினோம். அன்பழகன்அங்குள்ள ஆய்வு படுகையில் இந்த அனார்த்த சைட் பாறை வகையை அமைத்து அதில் சந்திரயான்-2 லேண்ட் ரோவர் ஆகியவற்றின் ஓடுதிறனை வெற்றிகரமாகச் சோதித்து பரிசோதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறைவு செய்தது" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வட்டமடிப்பான் கலனிலிருந்து பிரிந்து லேண்டர் என்று கூறப்படும் விக்ரம் நாளை (செப்டம்பர் 7) நிலவில் உள்ள தென்துருவப்பகுதியில் இரவு 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரையிறங்க உள்ளது.

இதுத் தொடர்பான காணொலி காண:

சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் தகவல் மைய இயக்குநர் பேராசிரியர் அன்பழகன் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.