மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும், குடிமக்கள் பதிவேட்டை கைவிட வேண்டும், இஸ்லாமிய மக்களுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அனைத்து ஜமாத்துகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
ஓசூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம்!