ETV Bharat / state

மும்பைக்கு செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் நாமக்கல் வழியாக செல்லும்! - மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில் இன்று முதல் நாமக்கல் வழியாக

நாமக்கல்: மும்பை நோக்கிச் செல்லும் விரைவு ரயில்கள் இன்று முதல் நாமக்கல் வழியாக இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

mumbai train changed route
mumbai train changed route
author img

By

Published : Dec 2, 2019, 11:16 PM IST

மும்பையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் வரை செல்லும் விரைவு ரயில்களை ஈரோடு வழியாக இயக்காமல், நாமக்கல் வழியே இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு ரயில்களையும் நாமக்கல் வழியாக டிசம்பர் ஒன்று முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதில், மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (எண் - 16339) ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் சேலத்திற்கு பிற்பகல் 3.25 மணியளவிலும், நாமக்கல்லுக்கு பிற்பகல் 4.28 மணியளவிலும் வந்து சேரும். அதேபோல், நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் (எண் - 16340) திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கரூருக்கு நண்பகல் 1.37 மணியளவிலும் , நாமக்கல்லுக்கு நண்பகல் 2.13 மணியளவிலும் வந்து சேரும்.

mumbai train changed route
மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில் இன்று முதல் நாமக்கல் வழியாக

அதன்படி, மதியம் 2.30 மணியளவில், நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி நாமக்கல் வழியாக முதன்முறையாக வந்த விரைவு ரயிலை நாமக்கல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர். மேலும், என்ஜின் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பளித்தனர்

இதேபோல், டிசம்பர் ஏழாம் தேதி முதல் திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் வரை செல்லும் விரைவு ரயில் (எண் - 11022) நாமக்கல்லுக்கு இரவு 8.53 மணிக்கு வந்து சேரும். மேலும், ஒன்பதாம் தேதி, மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் (எண் - 11021) விரைவு ரயில், நாமக்கல்லுக்கு அதிகாலை 4.09 மணிக்கு வந்து சேரும். இந்த இரு ரயில்களும் திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நாமக்கல் வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

Intro:நாகர்கோவிலில் இருந்து ஈரோடு வழியாக, மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில் இன்று முதல் நாமக்கல் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளதால், அந்த ரயிலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பளித்தனர்.

Body:மும்பையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் வரை செல்லும் விரைவு ரயில்களை ஈரோடு வழியாக இயக்காமல், நாமக்கல் வழியே இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரு ரயில்களையும் நாமக்கல் வழியாக டிச. 1 முதல் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியது.இதில், மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் (எண்: 16339), ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சேலத்திற்கு பிற்பகல் 3.25 மணியளவிலும் நாமக்கல்லிற்கு பிற்பகல் 4.28 மணியளவிலும் வந்து சேரும். அதேபோல், நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் (எண்: 16340), திங்கள், செவ்வாய் மற்றும் புதன், வெள்ளிக்கிழமைகளில் கரூருக்கு நண்பகல் 1.37 மணியளவிலும் , நாமக்கல்லுக்கு நண்பகல் 2.13 மணியளவிலும் வந்து சேரும்.

அதன்படி, மதியம் 2.30 மணியளவில், நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி நாமக்கல் வழியாக முதன்முறையாக வந்த விரைவு ரயிலை நாமக்கல் ரயில் நிலையத்தில் திமுக, கொமதேக கட்சியினர் மற்றும் பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் மலர்தூவி வரவேற்றனர். மேலும், என்ஜின் ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல், டிச. 7ஆம் தேதி முதல் திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் வரை செல்லும் விரைவு ரயில் (எண்: 11022) நாமக்கல்லுக்கு இரவு 8.53 க்கு வந்து சேரும். மேலும், 9-ம் தேதி, மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் (எண்: 11021) விரைவு ரயில், நாமக்கல்லுக்கு அதிகாலை 4.09 க்கு வந்து சேரும். இந்த இரு ரயில்களும் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நாமக்கல் வழியாகச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.