நாமக்கல் அடுத்துள்ள வேலங்கவுண்டப்பட்டியில் காயத்ரி நகர் என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தில் வீட்டுமனைக்காக அப்பகுதியை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 2013ம் ஆண்டு முதல், மாத தவணை முறையில் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் தவணைக்கான முழுப்பணத்தை (சுமார் 50 லட்சம் ரூபாய்) செலுத்திய பின்பும் வீட்டுமனையை பணம் செலுத்தியவர்களுக்கு ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நிறுவனத்தை அணுகி கேட்டபோது பணம் செலுத்தியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுமனை கிடைக்காத நிலையில் பணம் செலுத்தியவர்கள் பணத்தை திருப்பி கேட்டபோது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நிறுவன விதிகளின்படி வீட்டுமனையாக மட்டுமே அளிக்கமுடியும் என்றும் பணமாக திருப்பித்தரமுடியாது என மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசிடம் , வீட்டுமனைகளை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.
இதையும் படியுங்க:
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற வீட்டுமனை விற்பனையாளர்