ETV Bharat / state

வங்கியில் கொள்ளை - வெளியான சிசிடிவி காட்சி - Money thefts CCTV FOOTAGE

நாமக்கல்: மோகனூர் வங்கியில் 6.88 லட்ச ரூபாய் பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Money thefts CCTV FOOTAGE
Money thefts CCTV FOOTAGE
author img

By

Published : Sep 10, 2020, 6:00 AM IST

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம். இவர் தனது விவசாய பணிக்காக மோகனூர் இந்தியன் வங்கியில் 6.88 லட்சம் ரூபாய் நகை கடன் பெற்றுள்ளார்.

இவர் நேற்று மாலை வங்கியில் வாங்கிய பணத்தை பெற்றுக் கொண்டு அதனை இருசக்கர வாகன இருக்கையின் அடிபகுதியில் வைத்து விட்டு மோகனூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள கடையில் பொருட்களை வாங்க சென்றதாக தெரிகிறது.

அவர் கடையில் பொருட்களை வாங்கிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், தர்மலிங்கம் வந்த இருசக்கர வாகனத்தின் சீட்டை லாவகமாக திறந்து பணத்தை திருடி சென்றார். அவருடன் மூன்று நபர்கள் சேர்ந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பணத்தை திருடி செல்லும் காட்சி அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பணம் கொள்ளை சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.