ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை! - namakkal district news

நாமக்கல்: காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கழுத்தறுத்து படுகொலைசெய்யப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!
முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை!
author img

By

Published : Jan 2, 2021, 5:02 PM IST

நாமக்கல் அடுத்துள்ள மோகனூர் ஒருவந்தூரைச் சேர்ந்தவர் சசிக்குமார் (23). இந்நிலையில் நேற்று (ஜன. 01) இரவு காட்டூர் ரயில் பாதை அருகே மது அருந்தி கொண்டிருந்தபோது, சசிக்குமாருக்கும், மோகனூரைச் சேர்ந்த மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து மூவரும் மறைத்துவைத்திருந்த கத்தியால் சசிக்குமாரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிக்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி சசிக்குமார் இன்று (ஜன. 02) காலை உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த மோகனூர் காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சசிக்குமாருக்கும் மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகியோருக்கும் ஏற்கனவே காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக இருசக்கர வாகனத்தில் மணல் அள்ளுவது தொடர்பாக தகராறு இருந்துவந்ததாகவும், இந்த முன்விரோதம் காரணமாக பழிதீர்க்கும் வகையில், நேற்று இரவு மது அருந்த அழைத்துச் சென்று சசிக்குமாரை கத்தியால் சராசரியாக கழுத்து, தலைப்பகுதியில் தாக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான மன்னர் மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகியோரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.