நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கமணி கூறுகையில், "பொங்கல் பரிசாக பணம் வழங்குவதில் அரசியல் நோக்கம் உள்ளதாக கமல்ஹாசன் கூறுகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலிருந்தே பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலம் என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு தொகை ரூ. 2,500 வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைக் குறை கூறுபவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள். அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற திமுகவின் வெறி ஒருகாலும் நடக்காது - அமைச்சர் கடம்பூர் ராஜு!