நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா கலந்துகொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, "இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் திருநங்கைகளுக்கு என தனியாக மொபைல் செயலி உருவாக்கப்பட்டு, அதில் அவர்களது முழு விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
மொத்தம் 12 ஆயிரம் திருநங்கைகளில் 7 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. கரோனா காலகட்டத்தில் சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் காமராஜ் உடல்நலம் சீராகவுள்ளது’: மியாட் மருத்துவமனை தகவல்