கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும். அவ்வாறு வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து 3 அடி முதல் 6 அடி இடைவெளி விட்டு கடைகளில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் ஆங்காங்கே தடுப்பு வலைகள் அமைத்து தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள தனியார் மருந்து கடையில் சமூக இடைவெளி இல்லாமல் கடைக்கு முன்பு 50க்கும் மேற்பட்டவர்கள் மருந்துகளை வழங்கியதை அலுவலர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேலு, திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சென்று மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: உரிய ஆவணமின்றி வந்த லாரி: எச்சரித்து அனுப்பிய வட்டாட்சியர்!