நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை (மார்ச்.30) திருத்தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மக்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோயிலை அடையவிருந்த நிலையில் இருதரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இருதரப்பினரும் கடுமையாக மோதிய நிலையில், காவல் துறையினரின் வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் தடியடி நடத்தியதால், நிலையை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய ஒரு பிரிவினர் மீது உரிய நவடிக்கை எடுக்கக்கோரி மற்றொரு பிரிவினர் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அலுவலர்கள் யாரும் வராததால் கரூரிலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலை காவிரி இரட்டை காவிரி பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவிரி ஆற்று பாலத்தில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:’அபூர்வ சகோதர்கள்’ கார் முதல் 'பாஜக பிரச்சார வேன்' வரை: வண்டி ஓட்டி லைக்ஸ் அள்ளும் கௌதமி!