நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த இ-புதுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மல்லசமுத்திரம் காவல் துறையினர், சின்னதம்பி, அவருக்கு உதவியதாக ராமசாமி (எ) கதிர்வேல் ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் இன்று (அக்.22) நடைபெற்றது. இதில் சின்னதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், ராமசாமி (எ) கதிர்வேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.