இன்று 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விடுமுறை தினமான இன்று அரசு மதுபானக் கடைகளுக்கும், மதுபான விற்பனைக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஆனால், நாமக்கல் நகரின் மையப்பகுதியான நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையை அடுத்து, தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையிலிருந்து சட்ட விரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை அறிந்த மதுப்பிரியர்கள் உணவகத்திற்கு படையெடுத்தது மட்டுமின்றி உணவகத்திலேயே அமர்ந்து மது அருந்துவது, மது பாட்டில்களை வாங்கிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
இந்தச் சட்டவிரோத செயலுக்கு அலுவலர்களும் துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!