ETV Bharat / state

‘பொறுப்புகளை உணர்ந்து வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும்’ - நீதிபதி அறிவுரை - Lawyers

நாமக்கல்: வழக்கறிஞர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் அறிவுரை வழங்கியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர்
author img

By

Published : Aug 3, 2019, 7:12 PM IST

நாமக்கலில் கட்டப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாமக்கலில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நீதி மன்றத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்தும்போது, அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப் பட்டுவிடக்கூடாது. வழக்கு மற்றும் சட்ட விதிமுறைகள், பொறுப்புணர்வுகளை நன்கு அறிந்துகொண்டு காவல்துறை, வழக்கறிஞர்கள் செயல்பட்டால், நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்கலாம்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா

அதேபோல், நீதிமன்றத்தால் மட்டுமே வழக்குகள் தாமதம் ஆகிறது என்ற தோற்றதையும் மாற்ற முடியும். மேலும் நீதி விசாரணைகள் விரைந்து நடைபெறவும், நீதித் துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் வழக்கறிஞர்கள் தங்கள் பொறுப்புளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

Intro:வழக்கறிஞர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.S.சுந்தர் அறிவுரை

Body:தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திறப்பு விழா, நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.S.சுந்தர்,  இந்தச் சிறப்பு நீதிமன்றத்தைத்  திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது  நாமக்கல் மாவட்டதில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நீதி மன்றத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்தும்போது, அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப் பட்டுவிடக் கூடாது எனவும்,. வழக்கு மற்றும் சட்ட விதிமுறைகள் மற்றும் பொறுப்புணர்வுகளை நன்கு அறிந்து கொண்டு காவல்துறை, வழக்கறிஞர்கள் செயல்பட்டால், நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்கலாம் எனவும், நீதி மன்றத்தால் மட்டுமே வழக்குகள் தாமதம் ஆகிறது என்ற தோற்றதையும் மாற்ற முடியும் என்றும். நீதி விசாரணைகள் விரைந்து நடைபெறவும் நீதித் துறையின்மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவும் வழக்கறிஞர்கள் தங்கள் பொறுப்புளை உணர்ந்து செயல்பட வேண்டும். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அவர்கள் நன்கு கற்று அறிந்துகொண்டு செயல்பட வேண்டும். நாட்டில் இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய காலம் இது. சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக்-டாக் போன்ற செயலிகளை நம்நாட்டில் ஏற்கனவே தடை செய்த போதிலும், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், குழந்தைகள் மீது ஏற்படுத்தப்படும் தாக்குதல்களை காவல் மற்றும் நீதித்துறைகள் தடுக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி யாரும் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வசூல் செய்யக் கூடாது இதனை துவக்கத்திலே கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பெருமோசடி தடுக்கப்படும் எனவும், வழக்குகளை விரைந்து முடிக்க சமரச தீர்வு மையங்கள், மக்கள் நீதி மன்றங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கர்நாடகாவில் 20 சதவீதம் வழக்குகள் இதுபோன்ற முறையில் தீர்வு காணப்படுகின்றன. அதேபோல் தமிழகத்திலும், அதிக அளவிலான வழக்குகளை தீர்வு காணவேண்டும்" எனவும் தெரிவித்தார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம்,தமிழ்நாடு பாண்டிச்சேரி பார்கவுன்சில் தலைவர் வேல் மற்றும் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி லதா ஆகியோர் பங்கேற்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.