நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா ஊரடங்கு தளர்வு, பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நாளை (செப்.1) முதல் கரோனா ஊரடங்கு தளர்வை எவ்வாறு எதிர்கொள்வது, நோய்த் தொற்று பரவலை கட்டுபடுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், வரும் நாட்களில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதத்தில் கரோனாவிற்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்தார். ஆனால், ஜூலை மாதம் 10 பேரும், ஆகஸ்டு மாதம் 30 பேரும் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று அறிகுறி தென்பட்ட உடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட்டால் நோயின் தீவிர பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள முடியும்" என்றார்.
இதையும் படிங்க: நீலகிரி வருவதற்கு புதிய கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!