தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி புதன்கிழமை (24.02.2021) அன்று நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
காவிரி உபரி நீரை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக அரசியல் தலைவர்கள் கூறுவது கண்டத்துக்குரியது, இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. காவிரி - குண்டாறு திட்டத்தை செயல்படுத்தியது போல் காவிரி - திருமணிமுத்தாறை கால்வாய் மூலம் இணைக்கும் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
விவசாய உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் போது உற்பத்தி செலவை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் விலை நிர்ணயம் செய்தாலே விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கிட முடியும். சம்பள கமிஷன் பரிந்துரையை அரசு அமல்படுத்துவது போல் விவசாய கமிஷனின் பரிந்துரையையும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி என்பது கண் துடைப்பே என்று தெரிவித்தார்.
மேலும், நடப்பாண்டு சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகளை காத்திட, பாதி சர்க்கரை ஆலைகளை எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றி பெட்ரோலுக்கு பதில் மாற்று எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்தி, பெட்ரோலிய இறக்குமதியை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை இணைச் செயலர் ஆய்வு