நாமக்கல் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து நாமக்கல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, ஏப்ரல் 18ல் நடைபெறும் புரட்சி தமிழகத்தை மாற்ற உள்ளது. இங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதி வாய்ப்பு இல்லை. தொழில் நஷ்டம் அடைந்து கிடைக்கின்றன.
என்னைப் பார்க்க வரும் கூட்டம் தானாகவே வருகின்ற கூட்டம். எதிர்க்கட்சிகள் போல் பணம் கொடுத்து மக்களை அழைத்து வரவில்லை.
பரப்புரையில் நான் பாஜக பெயரை குறிப்பிடவில்லை என்று அனைத்து கட்சியினரும் குற்றம்சாட்டுகின்றனர். நான் பிரச்சாரத்தில் யார் பெயரையும் குறிப்பிடுவதில்லை. கள்வர்கள் பெயரை நான் ஒருபோதும் சொல்வதில்லை.
ஒரு நேர்காணலில் சேற்றில் பாஜகதான் முளைக்கும் என்று இல்லை. என்னை போன்ற நல்ல தாமரையும் முளைக்கும் என்று கூறினேன். அவ்வளவுதான், அப்போது முதல் பாஜகவுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். தற்போதைய அரசியல் நிலையை அப்போதே நான் ஹே ராம் படத்தில் கூறிவிட்டேன்.
இந்த தேர்தல் மூலம் மக்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நோட்டுகள் மூலம் பலத்தை காட்டுவதைவிட ஓட்டுகள் மூலம் உங்கள் பலத்தை காட்டுங்கள்.
இளைஞர்கள் தைரியமாக வந்து வாக்களியுங்கள். படித்தவன், படிக்காதவன் என இந்த தேர்தலில் எங்களை அடையாளம் காட்டுங்கள் என அப்போது தெரிவித்தார்.