ETV Bharat / state

'இந்தியாவில் ஆழ்துளைக் கிணற்றுக்கு தடைவிதிக்க வேண்டும்!'

நாமக்கல்: இஸ்ரேல் நாட்டைப் போன்று இந்தியாவிலும் ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்கு தடை விதிக்க வேண்டும் -கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்!
author img

By

Published : Oct 28, 2019, 8:07 PM IST

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 25ஆம் தேதி குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது மிகவும் வேதனையான ஒன்றாகும்.

இஸ்ரேல் போன்ற பாலைவன நாடுகளில்கூட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கத் தடை உள்ளது. அதனால் அந்த நாட்டைப் போன்று இந்தியாவிலும் ஆழ்துளைக் கிணறுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மீட்புப் பணிகளைப் பார்வையிட நடுக்காட்டுப்பட்டிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதால், அவருடன் வரும் தொண்டர்களால் மீட்புப் பணிக்கு தொய்வு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.

Intro:அரசியல் கட்சி தலைவர்கள் சுர்ஜித் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவது என்ற பெயரில் நடுக்காட்டுபட்டிக்கு செல்லக்கூடாது - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

Body:தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் "கடந்த 25ம் தேதி குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது மிகவும் வேதனையான ஒன்றாகும். விரைவில் சுர்ஜித்தை மீட்க வேண்டும். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழாய்களை அகற்றியது தான் இந்த விபத்திற்கு மூலக்காரணமாக அமைந்துள்ளது. இனிவருகாலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடக்க்கூடாது. குழந்தை சுர்ஜித்தை மீட்க தமிழக அரசின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. இருப்பினும் குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு குழுக்களை வைத்து முயற்சி செய்ததின் விளைவாகவே தற்போது 100 அடியை எட்டியுள்ளது. எனவே சுர்ஜித்தை மீட்க ஒரு குழுவை வைத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் தற்போது இவ்வாறு 100 அடிக்கு மேல் சென்றிருக்க வாய்ப்பு குறைவு. இஸ்ரேல் போன்ற பாலைவனநாடுகளுக்கு கூட ஆழ்துளைகிணறுகள் அமைக்க தடை உள்ளது. அதுபோல் இந்தியாவில் ஆழ்துளை கிணறுகளுக்கு தடை விதிக்கவேண்டும். ஏனெனில் நிலத்திற்கு கீழ் உள்ள அனைத்தும் இயற்கைக்கு சொந்தமானது. நாம் நிலத்தடி நீரை உறிஞ்சி பயன்படுத்தினால் நமது சந்ததியினர் நீரை பார்க்க கூட முடியாமல் பலைவனத்தையே பார்க்கக்கூடிய நிலைமை ஏற்படும். கர்நாடக அரசு காவிரி நீரை சரியாக பங்கீட்டு அளித்திருந்தால் விவசாயிகள் ஆழ்துளை அமைப்பதற்கு அவசியம் இல்லாமல் இருக்கும்.மேலும் அமைச்சர்கள் மீட்பு பணிகளை பார்வையிட நடுக்காட்டுபட்டிக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக அரசியல்கட்சி பிரமுகர்கள் கல்யாணம், காதுக்குத்து,கிடாவெட்டு என அனைத்திற்கும் செல்வதற்கே போதிய நேரம் இல்லை. அதற்கிடையில் குழந்தையை மீட்க அரசியல் கட்சி தலைவர்கள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. மேலும்அரசியல் கட்சி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றால் அவருடன் வரும் தொண்டர்களால் மீட்பு பணிக்கு தோய்வு ஏற்படும். மீட்பு பணிகளை இருந்த இடத்திலேயே மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.