ETV Bharat / state

Video: நகைக்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் கேட்ட அலுவலர்! - 6000 for gold loan discount

நாமக்கல் அருகே நகைக்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் கேட்கும் செயல் அலுவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நகைக்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் கேட்ட அலுவலர் வீடியோ வைரல்!

author img

By

Published : Apr 1, 2022, 11:02 PM IST

நாமக்கல்:கூட்டுறவு சங்கங்களில் உள்ள 5 சவரன் நகைகளை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்து, அந்த நகைகளை உரிய பயனாளிகளுக்கு திரும்ப ஒப்படைத்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி கூட்டுறவு சங்கத்தில் நகை தள்ளுபடியான பயனாளிகள் நகைகளைப் பெறுவதற்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றபோது செயல் அலுவலர் கோவிந்தன் பயனாளிகளிடம் 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும் எனக்கூறும் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும் வீடியோவில் அவர் பேசியதாவது, ’நீங்கள் தன்னுடைய உறவினர் என்பதால் 2000 மட்டும் செலுத்தினால் போதும். மற்றவர்கள் எல்லாம் 4 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி வருகின்றனர்’ என்றார். மேலும் பயனாளி எதற்கு நாங்கள் பணம் தர வேண்டும் என்று கேட்டபோது அதற்கு செயல் அலுவலர் கோவிந்தன், 'நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

அதற்காகத் தான் பணம் வசூல் செய்கிறோம்’ எனவும் கூறுகிறார். தற்போது கூட்டுறவு சங்க செயல் அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ வேகமாகப் பரவி வருவதால் பயனாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு நகைக்கடன் தள்ளுபடி செய்து வருவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் கூட்டுறவு செயல் அலுவலர் லஞ்சம் கேட்பது தமிழக அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நகைக்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் கேட்ட அலுவலர் வீடியோ வைரல்!

இதையும் படிங்க:திருப்பதி தரிசனத்திற்கு முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புச்சலுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.