நாமக்கல் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் இயங்கிவரும் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள், கிரீன் பார்க் நீட் பயிற்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் 5,000 மாணவர்களும், நீட் பயிற்சி மையத்தில் 2,000 மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் பள்ளி அலுவலகம், நீட் பயிற்சி மையம், அலுவலகம், பள்ளியின் இயக்குநர்கள் சரவணன், குணசேகரன், மோகன், சுப்பிரமணி ஆகியோரின் வீடுகளில் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்றது.
அப்போது பள்ளி மாணவர் சேர்க்கை மற்றும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்களின் விவரங்கள், அவர்களிடம் பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் குறித்த ஆவணங்கள் பற்றி விசாரணை நடைபெற்றதாகவும், பள்ளி இயக்குநர்கள், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரின் சொத்து விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். மேலும், இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
இதையும் படிக்கலாமே: தாமதமாக முடிந்த ஆலோசனை - கிளம்பிய தலைவர்கள்!