ETV Bharat / state

கரோனா காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கிறதா? - கரோனா காலத்தில் பெண் கல்வி நிலை

’பொட்ட புள்ள படிச்சி என்ன செய்யப் போறா? கல்யாணத்தை முடிச்சி வைச்சா காணாதா?’ என பெண்ணின் உயர்கல்விக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த பெண் கல்வி முன்னேற்றததைக் கொஞ்சம் ப்ரேக் எடுக்கச் செய்துவிட்டது, கரோனா காலம்.

பெண் குழந்தை
பெண் குழந்தை
author img

By

Published : Aug 31, 2020, 10:24 AM IST

Updated : Sep 3, 2020, 2:47 PM IST

ஒரு பெண் கல்வி கற்றால், அவரது கணவர் உண்ணும் உணவு புழுக்களாக மாறிவிடும் போன்ற மூட நம்பிக்கைகள் ஊறிக் கிடந்த நாடு இந்தியா. இந்நிலையில், கல்வி கற்கும் உரிமை அனைவருக்குமானது என்பதை ஜோதிபா புலே தனது மனைவி சாவித்ரி பாய்யின் மூலம் நாட்டிற்கு புரிய வைத்தார். இந்த முயற்சியில் இருவரும் அனைத்து தரப்பினரிடமும் நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்தனர்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரி பாய் அனைத்து பெண்களுக்கு கல்வி கிடைக்க வேண்டுமென பள்ளி ஒன்றினைத் திறந்தார். இப்படி, வரலாற்றின் பக்கங்களில் கல்வியின் கதவுகள் பெண்களுக்கு மெல்லத்தான் திறந்தன.

சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட வழிகாட்டு நெறிமுறையின் 45ஆவது பிரிவு 14 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வியைத் தர அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி இருக்கிறது. சட்டமேதை அம்பேத்கர், ஈவேரா போன்ற தலைவர்கள் பெண் கல்வியை வலியுறுத்தினர். ஆனால் சில இடங்களில் இன்னமும் கூட கல்வி எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி, அதிகப்பட்சமாக கேரளாவில் 92 விழுக்காடு பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். அதுவே தமிழ்நாட்டில் 73 விழுக்காடாகவுள்ளது. அதேபோல் இந்தியாவில் குறைந்த அளவு பெண்கள் கல்வியறிவு கொண்ட மாநிலங்களாக உத்தரப் பிரதேசம் (42.2%), பீகார் (33.1%) ஆகியவை உள்ளன.

இதனிடையே, பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அரங்கேறிவருகின்றன. பெண் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்துவதற்கான முக்கிய காரணங்களில் முதலாவது இது என்றே சொல்லலாம்.

கரோனா காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கிறதா?

இந்த மாதிரியான சூழலில் கரோனா நெருக்கடி கல்வியில் பல மாற்றங்களைப் புகுத்தியது. சில மாதங்கள் மூடியிருந்த பள்ளிகள் பாடங்களுக்கு தற்காலிக இடைவெளியைக் கொடுத்தது. பின்னர், தனியார் பள்ளிகள் பள்ளிக் கட்டணத்தை வசூல் செய்யும் யுக்தியாக ஆன்லைன் கல்வியை பரவலாக்கியது. இது அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு தடை கல்லாக அமைந்தது. பின்னர், அரசு கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாகவும், சில தனியார் தொலைக்காட்சி மூலமாகவும் குழந்தைகளிடம் கல்வியைக் கொண்டு சேர்க்க முடிவு செய்தது. ஆனால், எல்லா மாணவர்களும் இதில் பயன்பெறுகிறார்களா? அவர்களால் இந்த கற்றல் முறையினை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்றும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பெண்களுக்கு இந்த கல்வி முறை மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

என்ன மாதிரியான நெருக்கடிகள்

இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளில் இருந்து ஆசுவாசம் அளிக்கும் தளமாக பள்ளிகள் இருந்தன. இங்குதான் இவர்களுக்கான வெளி இருக்கிறது. தாங்கள் நினைப்பதை பேசும் சுதந்திரம் கிடைக்கிறது. படிப்பதைத் தவிர நண்பர்களைச் சந்திப்பது, உரையாடுவது என வெளியுலகைச் சந்திக்கும் வாய்ப்பாக பள்ளி இருந்தது. தற்போது பெண் குழந்தைகள் முற்றிலும் முடக்கப்பட்டார்கள்.

கிராமப் புறங்களில் பெற்றோரின் செல்போன்களைத்தான் பெண் குழந்தைகள் பள்ளிக் காலம் முடியும் வரை பயன்படுத்தமுடியும். வெகுசிலருக்கே தனி மொபைல் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரே வீட்டில் மூன்று குழந்தைகளும் ஒரு செல்போனும் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அதில், இருவர் பெண் குழந்தைகள், ஒருவர் ஆண் குழந்தை. இதில், அந்த மொபைலை பயன்படுத்தும் உரிமையில் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்? ஆண் பிள்ளைக்குத்தான். இது தான் எதார்த்தம்.

’பொட்ட புள்ள படிச்சி என்ன செய்யப் போறா? கல்யாணத்தை முடிச்சி வைச்சா காணாதா?’ என பெண்ணின் உயர்கல்விக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த பெண் கல்வி முன்னேற்றததைக் கொஞ்சம் ப்ரேக் எடுக்கச் செய்துவிட்டது, கரோனா காலம்.

இது குறித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கபாணியன் கூறுகையில், “நகர்ப்புறங்களைப் போல கிராமப் புறங்களில் அனைவர் கையிலும் மொபைல் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும், அது பெற்றோருடையதாக இருக்கும். இப்படி இருக்கையில் எப்படி ஆன்லைன் கல்வி எல்லாருக்கும் போய் சேரும். அதிலும் பெண் குழந்தைகளைப் பொருத்தமட்டில், திருமணம் செய்து வைக்கவே பெற்றோர் விரும்புவர். இவ்வளவு மெனக்கெட்டு படிக்க வைப்பது சிரமம்தான்”என்றார்.

இந்தியாவின் கடைக் கோடி கிராமத்தில் பயிலும் குழந்தைக்கும் இணையதள வசதி மிகுந்த பெருநகரத்தில் பயிலும் குழந்தை ஒன்றுக்கும் காணொலிக் காட்சி மூலமாக பாடம் நடத்துவது சமமாக இருக்க வாய்ப்பில்லை. நெட்வொர்க், மொபைலின் தரம் மாறுபட்டதாக இருக்கக் கூடும்.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாமக்கல் மாவட்ட பிரதேச குழு செயலாளர் ஜெயமணியிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “ஆன்லைன் கல்வி முறையால் அனைத்து வயது குழந்தைகளின் கைகளில் செல்போன் கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் குழந்தைகள் கல்வியை மட்டுமின்றி பாலியல் தொடர்பானவற்றையும் கூட பார்க்க வாய்ப்புள்ளது. வயதுக்கு ஏற்ற புரிதலுடன் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். பள்ளி விடுமுறையால் வீட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்திட மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளின் கல்வி கற்கும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.

சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கையில், தமிழ்நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் கடந்த ஐந்தாண்டுகளில் 250 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இத்தகைய குற்ற எண்ணிக்கை தேசிய சராசரியைவிட இரட்டிப்பாக அதிகரித்து 18 விழுக்காடாக உயா்ந்துள்ளது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

”ஆன்லைன் கல்வி முறையால் தற்போது பெண் குழந்தைகளுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி மூலம் பெரும்பாலான பெண் குழந்தைகள் மொபைலை பயன்படுத்தும்பட்சத்தில் ஹேக்கர்களால் கூட ஆபத்து வர வழிவகை செய்யப்படும்” என்கிறார் காந்தியவாதி ரமேஷ்.

பெண் கல்விக்கு ஆன்லைனில் இத்தகைய பாதுகாப்பின்மை இருப்பதற்கு சமூக கற்பிதங்கள் அதாவது பொதுபுத்திதான் காரணம். பெண் குழந்தைகளுக்கு நடந்து கொள்ளும் விதம் தொடங்கி உடுத்திக் கொள்ளும் ஆடை வரையில் வரையறைகளை இச்சமூகம் விதித்துள்ளது. அதனாலேயே பாலியல் ரீதியான பெண்கள் மீதான குற்றங்கள் கூட அவளின் உடை, அவள் வெளியே சென்ற நேரம் போன்ற காரணங்களால் நியாப்படுத்தப்படுகின்றனர். ஆனால், உண்மையில் பெண் குழந்தைகள் குடும்பத்தில், பள்ளியில், சமூகத்தில் என அனைத்து தளங்களிலும் அவர்களின் திறமை, உழைப்பு போன்ற காரணங்களுக்காக அங்கீகரிக்கப்பட வேண்டியவர்கள். பாலின பேதமில்லா குழந்தை வளர்ப்பு அதற்கு வழிவகை செய்யும்.

இதனை கிராம பஞ்சாயத்து முதல் நகராட்சி வரை முறையாக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆன்லைன் கல்வியாக இருக்கட்டும், பள்ளிக் கல்வியாக இருக்கட்டும் காரணங்களை அடுக்குவது பெண் குழந்தைகளின் கல்விக்கான முட்டுக்கட்டையாகவே இருக்கும். அதை விடுத்து, அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டும். நாமக்கல் மாவட்டத்தின் கல்வி அலுவலர் ஒருவரிடம் கரோனாவுக்கு பின்னரான பெண் குழந்தைகளின் வருகை வீதம் குறித்து கேட்டோம். ”இப்போது வரையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. பள்ளிகளில் சிடி மூலமாக, கல்வி தொலைக்காட்டி மூலமாக வசதிக் கேற்றார் போல பாடங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கிறோம்” என்றார். அந்த நிலை தொடர அரசு முழு மூச்சாக செயல்படவேண்டும்.
இதையும் படிங்க:மறுக்கப்பட்ட கல்வி, நீதிமன்றத்தை நாடிய 3 வயது பெண் குழந்தை!

Last Updated : Sep 3, 2020, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.